ad

Saturday, October 2, 2010

Excuseme, எனக்கொரு டவுட் !! எத வச்சுங்க நம்புறது ???


எத வச்சுங்க நம்புறது ???
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம், அதாவது திரைப்படங்கள் தயாரிக்கின்ற தாயாரிப்பாளர்களும் சரி ,தயாரிப்பு நிறுவனங்களும் சரி  தங்கள் திரைப்படங்களை விளம்பரம் செய்கின்ற போது ,,

'' அதி கூடிய பொருட்செலவில் உருவாகும் பிரமாண்டமான தமிழ் திரை,
200   கோடி இந்திய ரூபா செலவில் உருவான திரைப்படம்.'' உலக திரைப்பட வரலாற்றில் மிக கூடிய செலவில் உருவாகும் பிரமாண்டம்''.
என்றெல்லாம்  விளம்பரம் செய்வார்கள் .. இவ்வாறான விளம்பரங்களை கேட்கும் போது நிச்சயமாக அந்த திரைப்படத்தில் அப்படி என்னதான் செய்திருக்கிறார்கள் என்று திரைப்படத்தை பார்க்க செல்வோம், ஆனால் அந்த திரைப்படத்தில் அவ்வளவு பெய்ய தொகை செலவு செய்தமாதிரி எதுவுமே தெரியாது...( எல்லா திரைப்படங்களையும் சொல்ல வில்லை)
ஆகவே தயாரிப்பளர்களும் தயாரிப்பு நிறுவனங்களும் சொல்வது போல , உண்மையாக ஒரு திரைப்படத்துக்கு எவ்வளவு தொகைப்பணம் செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது, அதற்கு ஏதாவது கணக்கு அறிக்கைகள் காட்டப்படுமா/,அல்லது இதற்கு ஏதாவது சங்களில் பதிவுகள் இருக்கிறதா/? அப்படி எதுவுமே இல்லை என்றால் இவர்கள் சொல்வதை எத வச்சுங்க நம்புறது?

 இந்த சந்தேகமானது சிலவேளைகளில்  எனக்கு சினிமா துறை சம்பந்தமாக போதிய அறிவு  இல்லை என்பதை 
வெளிக்காட்டலாம், சிலவேளை சின்ன புள்ள தனமான வினாவாகவும்  இருக்கலாம்.. எதுவாக இருந்தாலும் , சந்தேகம் என்று வரும் போது அதனை கேட்டு, அறிந்து, தெளிவு பெற்றுக்கொள்ளுவது எனது வழக்கம் , அந்த வகையில் தான் இந்த கேள்வியும் எழுந்தது.
ஏனெனில் தங்களது திரைப்படத்தை பெரிதாக விளம்பர படுத்தி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுக்கொள்வதற்காக தயாரிப்பு நிறுவனங்கள் இந்த உத்தியை கையாளாலாம் இல்லையோ/?
 அதுதான் ஒரே போடாக போட்டு உடைசுட்டன்.

தயவு செய்து தெரிந்தவர்கள் சொல்லிட்டு போங்க.

4 comments:

Anonymous said...

எனக்கும் அதே டவுட்டுத்தாங்க. ம்ம்ம்ம் ..... வேறு யாராவது சொல்வாங்க. பொறுத்திருந்து பார்க்கலாம்.

வால்பையன் said...

தகவல் அறியும் சட்டத்துல சொல்லி கேட்டுப்பார்ப்போமா!?

Prapa said...

//Anonymous said...

எனக்கும் அதே டவுட்டுத்தாங்க. ம்ம்ம்ம் ..... வேறு யாராவது சொல்வாங்க. பொறுத்திருந்து பார்க்கலாம்.//

சொல்லணும் சொல்லணும் ஆமா.. ரொம்ப நாளா கேட்டுக்கொண்டு இருக்கிறன்.. ஹீ ஹி

Prapa said...

//வால்பையன் said...

தகவல் அறியும் சட்டத்துல சொல்லி கேட்டுப்பார்ப்போமா!?//

நிச்சயமா தல, கேட்டு பார்க்கலாம்.