இஸ்லாம் என்ன சொல்கிறது ?
விளம்பரங்கள் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது , இந்த கேள்வி கடந்த ரமழான் மாதத்தில் எனக்கு ஏற்பட்ட மிகவும் சிக்கலான கேள்வி, இது சிக்கலாகவும் தெளிவில்லாமலும் இருந்தமைக்கு இஸ்லாம் மதத்தை பற்றி நான் முழுமையாக அறிந்திராததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
சரி ஏன் இந்த சந்தேகம் வந்தது என்றால் கடந்த ரமழான் மாதத்தில் எமது வானொலி ஏராளமான சிறப்பு நிகழ்சிகளை ஒலிபரப்பியிருந்தது...
அத்தனையும் நேயர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது .
இதில் சில நிகழ்சிகள் விளம்பர அனுசரணையோடு ஒலித்திருந்தது .
இந்த அனுசரணையோடு ஒலித்த சில நிகழ்சிகள் சம்பந்தமாக அந்த நேரத்தில் சில இடங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது , அதாவது நிகழ்ச்சிகள் ஒலிப்பதற்கு முன்பும் பின்பும் அந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கிய நிறுவனங்களின் விளம்பரங்கள் ஒலிபரப்பாகும், இது வர்த்தக வானொலிகள் பற்றி அறிந்த எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
அனால் ஒரு சிலரது வாதம் என்னவென்றால் அவ்வாறு இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ஒலிக்க விடும்போது விளம்பரங்கள் ஒலிக்க கூடாதாம்!!
அத்தோடு இந்த விடயம் குறித்து விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் எமது வானொலியின் பெயரை குறிப்பிட்டு ஒலிபெருக்கியின் ஊடாக பள்ளிவாசல்களில் கூட தங்களது காட்டமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள் . கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது அதனால் அது பிழை இல்லை ஆனால் இந்த விளம்பரங்கள் விடயத்தில் இஸ்லாம் என்ன சொல்கிறது என்று அந்த நபர்கள் அறிந்திருக்கிறார்களா என்பதுதான் எங்கள் கேள்வி .
ஏனெனில் பின்னர் நங்கள ஏராளமான , இஸ்லாமிய மார்க்கம் பற்றி நன்கு அறிந்தவர்கள் பலரிடம் கேட்டறிந்து கொண்டோம் , அவர்கள் அனைவருமே இந்த வானொலி விளம்பரங்கள பற்றி நடுநிலமையான கருத்துக்களையே சொன்னார்கள் .
எனவே இந்த விடயத்தில் அந்த குற்ற சாட்டுகளை கூறியவர்கள் இஸ்லாம் மதம் என்ன சொல்கிறது என்று முழுமையாக அறிந்திருக்கவில்லை என்றே எண்ண தோன்றுகிறது .
எனவே நண்பர்களே இந்த விடயத்தில் உங்கள் ஆக்க பூர்வமான கருத்துகளை எதிர்பார்கிறேன். உங்கள் பார்வையில் விளம்பரங்கள் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? என்று உங்கள கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
9 comments:
விளம்பரம் ஒலிபரப்பாவிட்டால் அனுசரணையாளர்கள் யார் தருவார்கள்...!!!???அதில் ஒன்றும் தப்பிருப்பதாக எனக்கு தோன்றவில்லை.ஆனால் விளம்பரங்களைக் குறைத்து ஒலிபரப்பலாம்.ஏனெனில் பொதுவாக ஆழமாக கேட்டுக்கொண்டிருக்கின்ற நிகழ்ச்சிகளுக்கு இடையில் ஒலிபரப்பப்பட்டால் அலுப்பு ஏற்படும்.விளம்பரம் ஒலிபரப்பப்படும் நேரத்தில் அலைவரிசையை மாற்றக்கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம்.எனவே விளம்பரம் ஒலிபரப்பப்படுவதை விட கூறப்படும் விஷயங்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்பதில் நேயர்களுக்கு அதிகம் எதிபார்ப்பு உண்டு.
சகோதரா... இந்தியா ஊடகங்களின் பாதிப்பு தான் எம்மில் பல விடயங்களில் பிரதிபலிக்கிறது...
இங்கு சவுதி டிவியிலும் விளம்பரங்கள் உண்டு.
ரமலான் மாதத்தில் தான் அதிக விளம்பரங்கள்.
CLICK BELOW QUESTIONS & U GET SOLUTION
இஸ்லாத்தில் மறுபிறவி இல்லாதது ஏன்?
நோன்பு காலங்களில் வைகறை நேரத்தில் வயிறு முட்ட சாபிடுவது சரியா?
பள்ளி வாசலில் பெண்களை தடுப்பது ஏன்?
மத அடிபடையில் இட ஒதுக்கீடு கேட்பது சரியா?
இஸ்லாம் பெண்களை கொடுமை படுதுஹிறதா?
முஸ்லிம்கள் சமாதிகளை வணகுவது ஏன் ?
பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் தீவிரவாதம் செய்வது ஏன் ?
இஸ்லாம் பெண்களை கொடுமை படுத்துகிரதா ?
முஸ்லிம்கள் சமூக பணி செய்யாதது ஏன் ?
முஸ்லிம்கள் தங்களை தனித்து காட்டிகொள்வது ஏன் ?
மறுமையில் தண்டனை என்பது சரியா ?
முஸ்லிம்கள் கத்னா செய்வது ஏன் ?
முஸ்லிம்கள் தீவிரவாதம் செய்கின்றார்களா? கலப்பு திருமணம் விளக்கம் ?
for more question click here
முஸ்லிம் அல்லாத நண்பர்கள் இஸ்லாத்தை அறிந்திட
இது போன்ற கேள்விகள் அனைத்துக்கும் இலவசமாக ஆடியோ வீடியோ வாக பதில் உள்ளது டவுன்லோட் செய்து கேட்கலாம் .. பார்த்து பயன் பெறவும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் contact www.onlinepj.com
for more info
http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/kelvi_pathil_thokupu/
// ரோமியோவின் பக்கம் said...
விளம்பரம் ஒலிபரப்பாவிட்டால் அனுசரணையாளர்கள் யார் தருவார்கள்...!!!???அதில் ஒன்றும் தப்பிருப்பதாக எனக்கு தோன்றவில்லை.ஆனால் விளம்பரங்களைக் குறைத்து ஒலிபரப்பலாம்.ஏனெனில் பொதுவாக ஆழமாக கேட்டுக்கொண்டிருக்கின்ற நிகழ்ச்சிகளுக்கு இடையில் ஒலிபரப்பப்பட்டால் அலுப்பு ஏற்படும்.விளம்பரம் ஒலிபரப்பப்படும் நேரத்தில் அலைவரிசையை மாற்றக்கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம்.எனவே விளம்பரம் ஒலிபரப்பப்படுவதை விட கூறப்படும் விஷயங்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்பதில் நேயர்களுக்கு அதிகம் எதிபார்ப்பு உண்டு.//
சரிதான் தௌசீப் , இப்பொழுது இருக்கின்ற போட்டி வானொலிகளுக்கு மத்தியில் வானொலிகள் நடத்துவது என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல... ஆகவே விளம்பரங்கள மிக முக்கியமானது .
//ம.தி.சுதா said...
சகோதரா... இந்தியா ஊடகங்களின் பாதிப்பு தான் எம்மில் பல விடயங்களில் பிரதிபலிக்கிறது...///
உண்மைதான் , நல்ல விடயங்களை எடுத்துக்கொள்வோம்.
// சிநேகிதன் அக்பர் said...
இங்கு சவுதி டிவியிலும் விளம்பரங்கள் உண்டு.
ரமலான் மாதத்தில் தான் அதிக விளம்பரங்கள்.////
வானொலி தொலைக்காட்சிகள் என்று வரும்போது விளம்பரங்கள் தவிர்க்க முடியாத ஒன்று ,அதேவேளை விளம்பரதாரர்கள் விரும்புகின்ற நேரங்களில் விளம்பரங்களை ஒலி/ ஒளிபரப்புவதும் அவர்களுக்கு மேலும் நன்மை பயக்கும்.. ஆகவேதான் சில சிறப்பு தினங்களில் விளம்பரங்கள் ஊடகங்களை ஆக்கிரமித்து கொள்கின்றன..
// INAMUL HASAN said...
முஸ்லிம் அல்லாத நண்பர்கள் இஸ்லாத்தை அறிந்திடஅனைத்துக்கும் இலவசமாக ஆடியோ வீடியோ வாக பதில் உள்ளது டவுன்லோட் செய்து கேட்கலாம் .. பார்த்து பயன் பெறவும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் contact www.onlinepj.com//
நல்ல தகவல்கள் அறிந்து கொண்டோம் நன்றி..
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் பிரபா,
தாங்கள் சார்ந்திருக்கும் நிறுவனத்தைப் பற்றி முஸ்லிம்களிடமிருந்து விமர்சனம் வந்தவுடன் விமர்சனத்திற்கான காரணத்தை அறிய முற்பட்ட உங்களின் (உங்களது நிறுவனத்தின்) செயலை நான் உளமார பாராட்டுகிறேன்.
நிகழ்ச்சிகளுக்கு இடையில் விளம்பரம் செய்வதில் கண்டிப்பாக தவறில்லை. ஆனால் அந்த விளம்பரம் இஸ்லாம் அனுமதித்த அளவில் இருக்கின்றதா என்பது தான் பார்க்கப்பட வேண்டிய அம்சம். இஸ்லாமிய நெறிமுறைகளை பேணாத விளம்பரங்களை இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் போது விளம்பரம் செய்வது தவறாகும்.
--
சகோதரத்துவத்துடன்,
பி.ஏ.ஷேக் தாவூத்.
http://www.athikkadayan.blogspot.com
(உதிரம் கொடுத்து உயிர் காப்போம். மக்களிடையே மனிதநேயம் வளர்ப்போம்.)
Post a Comment