ad

Wednesday, September 15, 2010

'தமிழ்துளி' தேவன் மாயனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

பதிவுலகில் நான் கண்ட பசுமையான உள்ளங்களில் ஒரு உள்ளம்....
பாராபட்சம் இன்றி பாராட்டுக்கள் தெரிவிக்கும் பரந்த மனமுடையவர் .....
கற்பனை உலகில் இவர் ஒரு சகலகலா வல்லவன் ( இது ரொம்ப ஓவர் இல்லை சார்).
440 பதிவர் பெருமக்கள் இவரை தொடர்ந்தும் தொடர்கிறார்கள் (அடியேனும் தான்) .
இவரின் கருத்துரைகள் கிடைக்காதா என்று ஏங்கும் உள்ளங்களில் அடியேனும் ஒருவன்.
தமிழ் பெருங்கடலில் இவர் ஒரு 'தமிழ்துளி '.  
ஆம்  இன்று பதிவர் டாக்டர்  தேவன் மாயம் அவர்களுக்கு  பிறந்த நாள்..............
பதிவுலகம் சார்பாக எமது சந்தோசமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
 பாருங்கள் மனுஷன் இப்பவும் எதோ சிந்திக்கிறார் ஏதாவது பதிவிடலாம என்றுதான் யோசிப்பார்...
ஏதாவது பதிவிட்டால் போதும் என்று இல்லாமல் , பதிவின் மூலமாக ஏதாவது நல்ல விடயங்களை சொல்லலாமா என்று பொறுப்புடன் சிந்திக்கும் பதிவர் டாக்டர் .
இவரின் மருத்துவ குறிப்புகள் அடங்கிய ஏராளமான பதிவுகள் நிறைய வைத்தியர்களுக்கே உதவியாக இருப்பது இன்னும் இன்னும் சிறப்பாக அமைகிறது.

நான் பதிவெழுத வந்த காலங்களில் எனக்கு கிடைத்த அன்பான நண்பர்களில் வைத்தியரும் ஒருவர் . அப்போதெல்லாம் நான் சிந்திப்பதுண்டு , புதியவர்கள், சிறியவர்கள் என்றெல்லாம் பார்க்காமல்  உடனுக்குடன் தனது கருத்துக்களை தந்து என்னை உற்சாக படுத்திய பெருமகனுக்கு இன்று பிறந்த நாள் , மனதார வாழ்த்துகிறேன் ஐயா உங்களை.....

பதிவர் டாக்டர் தேவன்மயனின் ஒரு சில பதிவுகளை இங்கே தரலாம்

சாப்பிட்ட பின் மாரடைப்பு!

இவர்கள் உறவினர்களா?

 ஏன் நீதிபதி விசாரணை?

கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல்!!

மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!-1 

இப்படி எத்தனையோ நல்ல பதிவுகள் என்னால் ரசிக்கப்பட்டவைகள் உண்டு .....

நீங்களும் ஒருமுறை டாக்டர் அவர்களின் பதிவுகளை படித்து பாருங்கள் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும், .

வைத்தியரே உங்கள் எழுத்து வைத்தியம் இன்னும் பல்லாண்டு காலம் தொடர வேண்டும் என்று வாழ்த்து கின்றோம் .

வாழ்க பல்லாண்டு ........... வாழ்க பல்லாண்டு..... !!!

 











6 comments:

சென்ஷி said...

மருத்துவர் அய்யாவிற்கு,

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..

Jerry Eshananda said...

தேவாவுக்கு வாழ்த்தும்,உங்களுக்கு நன்றியும்

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவா சார்...

அ.முத்து பிரகாஷ் said...

தோழர் தேவன் மாயம் அவர்களுக்கு எனது அன்பின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
அவரது நிஜப் பெயரே தேவன் மாயம் தானா தோழர்?
உங்கள் பகிர்வுக்கு நன்றி தோழர்!

வழிப்போக்கன் said...

டாக்டருக்கு இனிய பிறந்த நாள் வாழ்துக்கள்...

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com