ad

Monday, August 31, 2009

"பணம் காய்க்கும் மரம்" !!!!!!



தலைப்பை பார்த்து நிறைய பிடுங்கலாம் என எண்ணி ஓடோடி வந்த நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு கூலான வணக்கம்.

அதாவது , உண்மையில் இப்படி மரம் உலகத்தில் இருந்தால் உலகத்தில் இப்போது இருக்கின்ற பொருளாதார சிக்கல்களுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கலாம்.

அது மட்டுமல்லாமல், கட்டாயம் வீட்டுக்கு நாலு மரத்த நாங்க நட்டு நீர் ஊற்றாமலா போயிருவோம்!


அந்த ஏக்கங்கள் எல்லாம் ஒரு புற மிருக்க இப்படியான மரம் உலகத்தில எங்காவது இருக்கா என்று கேட்டு மொக்கை கேள்வி கேட்டவன் என்ற பெருமைக்கு சொந்தக்காரன் ஆக நான் விரும்ப வில்லை .

அப்ப இந்த விஷயம் இப்ப எதுக்கு என்று கேட்டால்தான் முக்கியமான எனது சந்தேகம் முடிவுக்கு வரும் ,,,,,,,

நீங்கள் எல்லோருமே எனக்கு நல்லதொரு தீர்வை பெற்று தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்து யோசித்த எனக்கு பலன் கிடைக்கும்.

இப்ப என்னுடைய பிரச்சனைக்கு வருகிறேன்... அதாவது ,


"பணம் மரத்தில் காய்ப்பதில்லை என்று சொல்வது உண்மையானால்,பணம் இருக்கும் வங்கிகளுக்கு மட்டும் ஏன் 'கிளைகள்" இருக்கிறது?!!!!!!!!!!!!"


இந்த கேள்விக்கு மட்டும் விடை சொன்னால் உங்களை கொஞ்சம் கீழே பாருங்க இப்படி பறக்க வைப்பேன்.

30 comments:

சப்ராஸ் அபூ பக்கர் said...

///"பணம் மரத்தில் காய்ப்பதில்லை என்று சொல்வது உண்மையானால்,பணம் இருக்கும் வங்கிகளுக்கு மட்டும் ஏன் 'கிளைகள்" இருக்கிறது?!!!!!!!!!!!!"//

அதானே!.... நான் வரவில்லை தோழரே இந்த கபடி விளையாட்டுக்கு.....

இருந்தாலும் நல்லாத் தான் யோசிக்கிறீங்க.... தூக்கம் இல்லாம வேற விழித்திருந்து யோசித்திருக்கீங்க.... நல்ல பதில் கிட்டாமலா போய் விடும். இருந்தாலும் நான் பதில் சொல்ல மாட்டனே.... ஏன் தெரியுமா?... என்னால பணத்துக்கு மேல ஏறி பறக்க முடியலையே.... ஹி.... ஹி.....

வால்பையன் said...

// இப்படி மரம் உலகத்தில் இருந்தால் உலகத்தில் இப்போது இருக்கின்ற பொருளாதார சிக்கல்களுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கலாம். //

இவ்வுலகில் எந்த மரத்தில் எது காய்த்தாலும் அதன் மதிப்பு பணத்தில் தான்!, ஆக மரத்தில் காய்க்கும் மாங்காயா இருந்தாலும் சரி, செடியில் காய்க்கும் மிளகாயாக இருந்தாலும் சரி அதுவும் ஒரு வகையில் பணம் தான்!

பணமே நேரடியாக காய்க்க வேண்டிய அவசியமில்லையே!

Prapa said...

// சப்ராஸ் அபூ பக்கர் said...
///"பணம் மரத்தில் காய்ப்பதில்லை என்று சொல்வது உண்மையானால்,பணம் இருக்கும் வங்கிகளுக்கு மட்டும் ஏன் 'கிளைகள்" இருக்கிறது?!!!!!!!!!!!!"//

அதானே!.... நான் வரவில்லை தோழரே இந்த கபடி விளையாட்டுக்கு.....//

தப்பிட்டீங்க போல ....!!

Prapa said...

// வால்பையன் said...
// இப்படி மரம் உலகத்தில் இருந்தால் உலகத்தில் இப்போது இருக்கின்ற பொருளாதார சிக்கல்களுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கலாம். //

இவ்வுலகில் எந்த மரத்தில் எது காய்த்தாலும் அதன் மதிப்பு பணத்தில் தான்!, ஆக மரத்தில் காய்க்கும் மாங்காயா இருந்தாலும் சரி, செடியில் காய்க்கும் மிளகாயாக இருந்தாலும் சரி அதுவும் ஒரு வகையில் பணம் தான்!

பணமே நேரடியாக காய்க்க வேண்டிய அவசியமில்லையே!//
அப்பிடியா ஓகே.... கிளைகள் எப்படி வந்தது அதுக்கு பதில் வேணும்.

ilangan said...

இதற்காக தனியாக ருமில் இருந்து சிந்திப்பீர்களோ....

Prapa said...

// ilangan said...
இதற்காக தனியாக ருமில் இருந்து சிந்திப்பீர்களோ....//

இருந்தாலும் பரவாயில்ல ,தூங்காமல் சிந்தித்தோம் அதுதான் மேட்டர்.

க.பாலாசி said...

நண்பா...நல்லாதான் யோசிச்சு எழுதியிருக்கீங்க...அப்படி ஒரு மரம் இருந்தால் அது அரசியல்வாதிகளின் வீட்டில் மட்டும் இருக்கும் அரசாங்க சொத்தாக மாறிவிடும்..

ஆயில்யன் said...

//தலைப்பை பார்த்து நிறைய பிடுங்கலாம் என எண்ணி ஓடோடி வந்த நண்பர்கள்//

வரவேற்பு பலமா இருக்கேன்னு ஆசை ஆசையா ஓடோடி வந்தேன் ஒண்ண்ணுமில்லையா !

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:)

Prapa said...

// க.பாலாஜி said...
நண்பா...நல்லாதான் யோசிச்சு எழுதியிருக்கீங்க...அப்படி ஒரு மரம் இருந்தால் அது அரசியல்வாதிகளின் வீட்டில் மட்டும் இருக்கும் அரசாங்க சொத்தாக மாறிவிடும்..//

அட இத பற்றி யோசிக்கவே இல்ல ...................

Prapa said...

// ஆயில்யன் said...
//தலைப்பை பார்த்து நிறைய பிடுங்கலாம் என எண்ணி ஓடோடி வந்த நண்பர்கள்//

வரவேற்பு பலமா இருக்கேன்னு ஆசை ஆசையா ஓடோடி வந்தேன் ஒண்ண்ணுமில்லையா !

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
:)
//
ஒண்ணுமே இல்லேன்னு யாரு சொன்னது ? வரும் பாருங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .

பரிசல்காரன் said...

அது ஏன்னு உங்களுக்கு தனியா சொல்றேன் பாஸ்!

Prapa said...

// பரிசல்காரன் said...
அது ஏன்னு உங்களுக்கு தனியா சொல்றேன் பாஸ்!//


தனியாகவோ கூட்டமாகவோ sollirunga sir, thalaiye vedichirum போல இருக்கு.....

வலசு - வேலணை said...

வங்கி என்பது தமிழ்ச் சொல் அல்ல. Bank என்பது மருவி வங்கி ஆயிற்று. வைப்பகம் என்பது சரியான தமிழ்ப் பதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதுசரி!
உங்க மணிக்கூடு ஒழுங்கா ஓடுதா?
அது எப்படிங்க காலில்லாமல் ஓடுது?
மரங்களுக்கு மட்டுமே கிளைகள் உண்டென்று உங்களுக்கு யாருங்க சொன்னாங்க?

Prapa said...

// வலசு - வேலணை said...
வங்கி என்பது தமிழ்ச் சொல் அல்ல. Bank என்பது மருவி வங்கி ஆயிற்று. வைப்பகம் என்பது சரியான தமிழ்ப் பதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதுசரி!
உங்க மணிக்கூடு ஒழுங்கா ஓடுதா?
அது எப்படிங்க காலில்லாமல் ஓடுது?
மரங்களுக்கு மட்டுமே கிளைகள் உண்டென்று உங்களுக்கு யாருங்க சொன்னாங்க?//

ithukku thaan unga pola naalu peroda kooddu vachchukka venum enru solrathu.

Unknown said...

கொழும்பு சர்வதேச வானொலி தனது வானொலி ஒலிபரப்பை மீண்டும் நிறுத்தியுள்ளது .

மீண்டும் ஆரம்பிக்கப்படுமா ?

http://voipadi.blogspot.com/2009/08/blog-post_31.html

சீமான்கனி said...

நல்லா எத்துரிங்கயா போதைய...
நாங்க மட்டமாட்டோலே....விடு ஜூட்ட்ட்ட்...

மங்களூர் சிவா said...

இது சீரியஸான கேள்வியா இல்ல காமெடியா???

குறை ஒன்றும் இல்லை !!! said...

சரிங்க,, கேட்டு சொல்ரேன்!!!

அப்பாட எஸ்கேப்..

Prapa said...

//
வாய்ப்பாடி குமார் said...
கொழும்பு சர்வதேச வானொலி தனது வானொலி ஒலிபரப்பை மீண்டும் நிறுத்தியுள்ளது .

மீண்டும் ஆரம்பிக்கப்படுமா ?

http://voipadi.blogspot.com/2009/08/blog-post_31.html

ஆரம்பிக்கப்படும் ஆனால் கால அளவு சொல்ல முடியாது..

Prapa said...

// seemangani said...
நல்லா எத்துரிங்கயா போதைய...
நாங்க மட்டமாட்டோலே....விடு ஜூட்ட்ட்ட்...//


இப்படி எஸ்கேப் ஆகிரீங்களே???

Prapa said...

// மங்களூர் சிவா said...
இது சீரியஸான கேள்வியா இல்ல காமெடியா???//


ரெண்டுக்கும் பதில் சொல்லலாமே !
அடியேன் மொக்கையாக தான் போட்டது.

Prapa said...

//
குறை ஒன்றும் இல்லை !!! said...
சரிங்க,, கேட்டு சொல்ரேன்!!!

அப்பாட எஸ்கேப்..//

அப்படி தப்பிக்க முடியாது ,பதில் சொல்லியாக வேண்டும் ராசகுமாரா!

சப்ராஸ் அபூ பக்கர் said...

உங்களை ஒரு பதிவுக்கு அழைத்திருக்கிறேன். வந்து தொடருங்கள்.....

இது நம்ம ஆளு said...

எப்படி இப்புடி
:)

Prapa said...

// சப்ராஸ் அபூ பக்கர் said...
உங்களை ஒரு பதிவுக்கு அழைத்திருக்கிறேன். வந்து தொடருங்கள்.....//

இதோ வருகிறோம் தொடர....

Prapa said...

// இது நம்ம ஆளு said...
எப்படி இப்புடி //
அப்புடிதேன் ..... வருகைக்கு நன்றிங்கோ...

:)

Admin said...

எனக்கு அவசரமா காசு கொஞ்சம் தேவைப்படுகிறது பிரபா.

Admin said...

என்ன இது மாற்றம் பெயரே......................................

dharshini said...

///"பணம் மரத்தில் காய்ப்பதில்லை என்று சொல்வது உண்மையானால்,பணம் இருக்கும் வங்கிகளுக்கு மட்டும் ஏன் 'கிளைகள்" இருக்கிறது?!!!!!!!!!!!!"//

ரூம் போட்டு யோசிப்பீங்களோ?!

உரக்குழியில் கொட்டுவது போல் எல்லோரும் பணத்தை (வங்கியில்) கொட்டுவதால் அதற்கு பல கிளைகள் முளைக்கிறது..

ஹேமா said...

பிரபா,பணத்தைக் கஸ்டப்பட்டு உழைக்கும்போதே இந்த மனுசங்க படுற பாடு....ரொம்ப சுகமா மரத்தில காய்ச்சுத் தொங்கி எடுக்கிறதா இருந்தா என்னவெல்லாம் செய்வாங்கன்னு கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க கொஞ்சம்.
அதாலதான் கடவுள் இப்பிடி ஆகிட்டான்.