ad

Tuesday, August 18, 2009

வாங்க புதுசா டி குடிப்போம்.

ஒன்னுமில்லீங்க கொஞ்ச புதிய பாத்திரங்கள் வாங்கினோம் , அதைத்தான் உங்களுக்கிட்ட்ட காட்ட வந்திருக்கம், பிறகு நீங்க வாங்கியதை காட்ட இல்லன்னு நீங்க சொல்ல கூடாதே அதுதான் இப்ப காட்டுறம் பிடிச்சிருந்தால் காச தந்து எடுத்துக்குங்க.....


சிங்கமொன்னு புறப்பட்டதே அதுக்கு இப்ப ..........

கண்டேன் எங்கும் பூ முகம்....
நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க....


என்னங்க ஒண்ணுமில்ல சும்மா ஒரு பில்ட் up....


இதையெல்லாம் பார்த்த நம்ம "வாலுவும்" அவரது சகாக்களும் எப்படி சரக்கோட தூங்குறாரு பாருங்க.....


Thursday, August 13, 2009

எந்த கை உங்கள் நம்பிக்"கை" ?


இன்று சர்வதேச "இடது கை பழக்கம் கொண்டவர்கள்" தினம் , காலையிலிருந்து வானொலியிலும் நல்ல விளக்கம் எல்லாம் சொல்லி இப்போ உங்களோடு பதிவினூடாகவும் சில விடயங்களை பகிரலாம் என்று வந்திருக்கோம்.

இப்ப பாருங்க இந்த உலகத்தில் உருவாக்கப்படுகின்ற அதிகமான பொருட்கள் "வலது கை பழக்கம் " கொண்ட அன்பர்களுக்காகவே தயாரிக்கப்படுவதாக சில இடது கை பழக்கம் கொண்டவர்கள் குறைப்பட்டு கொள்வதுண்டு ....

குறிப்பாக சில பொருட்களை சொல்லலாம் ., கத்தரிகோல் ,ஹொக்கி போட்டிகளில் பயன்படுத்து மட்டை , கிட்டார் வாத்திய கருவி,பாடசாலைகளை பயன்படுத்தும் கதிரையுடன் கூடிய மேசை போன்ற விடயங்களை சொல்லலாம் .
இது தவிர இன்னும் ஏராளமான விடயங்களை குறிப்பிடலாம்.

எது எவ்வாறாக இருந்தாலும் இடது கை பழக்கம் கொண்டவர்கள் எதோ ஒரு வகையில் சிறந்தவர்களாக இருப்பதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன்.

அனால் மற்றுமொரு செய்தி , இடக்கை பழக்கம் உள்ளவர்களை விட வலக்கை பழக்கம் உள்ளவர்கள் ஒன்பது ஆண்டுகள் கூடுதலாக வாழ்கிறார்களாம்.

இந்த விடயம் ஆராய்ச்சிகள் மூலமாக சொல்லப்பட்டாலும் எந்த அளவுக்கு நடைமுறையில் கண்டிருக்கிறோம் ??????

ஆனால் இப்பொழுது அவுஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்ர ஒரு விடயத்தின் மூலம் இடது கை பழக்கம் உள்ளவர்கள் பெருமையடைய கூடியதாக உள்ளது.

அதாவது "இடது கை பழக்கம் உள்ளவர்கள் வலது கை பழக்கம் உள்ளவர்களை விட விரைவாக சிந்திக்கிறார்கள்." என்பதே அந்த முடிவு.

ஏனென்றால் இடது கை பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகங்களையும் பயன் படுத்த முடிவதாகவும் ,விரைவாக தகவல் களை மூளைக்கு அனுப்பி பெற முடிவதாகவும் அவர்களுடைய ஆராய்வின் முடிவுகள் சொல்கிறது.

இதனால் இடது கை பழக்கம் உள்ளவர்களால் நுட்பமான் பணிகளையும்,விளையாட்டு போன்ற துறைகளில் அவர்கள் சிறந்து விளங்குவதையும் நாங்கள் அவதானிக்கலாம்,அது மட்டுமன்றி பார்வை சம்பந்தப்பட்ட அதிகமான போட்டிகளில் இடது கை பழக்கம் உள்ளவர்களே அதிகமாக வெற்றிகளை பெற்று கொள்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சி தவிர இன்னுமொரு பெருமை தரக்கூடிய விஷயம், "Stewardesses" என்ற வார்த்தை இடது கையாலேயே டைப் பண்ண வேண்டிய மிக நீளமான வார்த்தை.


இதை அறிந்து தானோ ஜப்பானியர்கள் குழந்தைகளுக்கு இரண்டு கைகளாலும் எழுத கற்று கொடுக்கிறார்களோ தெரியல !!!!

இன்றைய நாளுக்கு பொருத்தமான ஒரு பதிவை இரண்டு கைகளையும் பயன் படுத்தி டைப் பண்ணிய திருப்பதி எனக்கு...........


இப்ப சொல்லுங்க எந்த கை உங்கள் நம்பிக்"கை" ?.

Tuesday, August 11, 2009

என்னடாப்பா வாறதானே!!!!!!!!

என்னடாப்பா எல்லோரும் வார தானே ??? 23 ம் திகதி ஞாயிற்று கிழம காலம்புற 9 மணிக்கு கொழும்பு தமிழ் சங்க வினோதன் மண்டபத்துக்கு வாங்கடாப்பா ....நான் சொல்லி போட்டன் பிறகு சொல்ல இல்ல என்று கவலைபடாதங்கோ.

Thursday, August 6, 2009

என்னங்க பண்ண......


இப்பவெல்லாம் அடிக்கடி பதிவிட முடிவதில்லை ,காரணம் கணினியின் முன் இருந்தால் ஒரே தலையிடி ....கொஞ்ச நேரத்துக்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது,,,,,,, கண்ணுக்கு வேற கஷ்டமாயிருக்கு. பிறந்ததிலிருந்து தொடர்ச்சியாக 12 வருடங்களாக கணினியோடு இடை விடாது இணை பிரியாமல் இருந்தாலோ என்னவோ தெரியல .....


இப்ப நான் என்னங்க பண்ணலாம், பதிவுலகில் இருக்கும் வைத்திய நண்பர்கள் ஆலோசனைகளை தாருங்கள்.

Wednesday, July 29, 2009

இவர் அவரா ??? உங்களுக்கு ஞாபகம் இருக்கா ??

மாப்பு பாப்ப்மையா உமக்க எனக்கா என்று !
நெஞ்சில தில் இருந்தா வா பாக்கலாம்....
தம்பி வுஷ் உம்மட பிரச்சனை தாங்க முடியல ,விரைவாக எதையாவது சொல்லிட்டு போவியா , எனக்கு தலை வலிக்குது ராசா.....
இந்த மீனையே பிடிக்க முடியல இதற்குள்ள நீங்கெல்லாம் நாட்ட பிடிக்க போறீங்களோ....
ஐயோ ஹீ ஹீ ....

Tuesday, July 28, 2009

பதக்கம் வேணுமா??? வாங்க ஜெயிக்கலாம்.


வாழ்கை விளையாட்டு

வாழ்க்கை ஒரு வழுக்கு மரம்!

சில பேர் ஏறுவார்

பல பேர் சறுக்குவார்.


வாழ்க்கை ஒரு நீச்சல் தடாகம்

சில பேர் நீந்துவார்

பல பேர் மூழ்குவார்.


வாழ்க்கை ஒரு தடைதாண்டி ஓட்டம்

சில பேர் ஓடுவார்

பல பேர் இடறுவார்.


வாழ்க்கை ஒரு மல்யுத்தம்

சில பேர் மோதுவார்

பல பேர் விலகுவார்.


வாழ்க்கை ஒரு மரதன் ஓட்டம்

சில பேர் ஓடி முடிப்பார்

பல பேர் ஓடி ஒழிப்பார் .


நன்றி- ஸல்மாநுல் ஹரீஸ்-வாழைச்சேனை

உயர்ந்த உள்ளங்கள்.

யாரு வந்தது முதலில்...??????/
என்ன விட இந்த உலகத்தில் நின்றது யாருமில்ல .......என்குமில்லா.....

யப்பா இத விட எங்காவது பாதுகாப்பான ஹெல்மெட் கிடைக்குமாப்பா !!!!!????
ரொம்ப கூல் இருக்குதையா<<,,,,
மழைக்கால மேகம் ஒன்று "என் வலையில் மாட்டியதே "!
அதற்காகதானே நான் ஸ்கூல் போகவில்லை>>>>>>..ஹீ ஹீ ,,,,,

யார் இந்த கவிஞன்...????


கவிஞன் என்றால்
யாரென கேட்டு
என் மனச்சாட்சி
மல்லுக்கட்டியது!

நான் எழுத்துக்களை செதுக்கும்
சிற்பி என்றும்
உணர்வுகுக்கு
பிரம்மா என்றும் சொன்னேன் !
பேசும் மொழியை
காப்பாற்றும்
காலகிளியும் என்றேன்.

மனச்சாட்சி மறுத்து,,,,,,,
நேரம் தெரியாமல்
சிந்திக்கும்
சிந்தனைப் பித்தன் என்றும்
கண்டதை
எழுதிதள்ளும்
ஞானக் கிறுக்கன் என்றும்
அது சொன்னது!
நான் நிறுத்தி,
இருளிலுள்ள சமூகத்தை
வெளிச்சத்துக்கு கொண்டுவரும்
மின்சாரம் என்றேன்.
கடைசி வரைக்கும்
என் பெயரைக் காப்பாற்றும்
சம்சாரம் என்றேன்!

மீண்டும் மறுத்து ,
என் கழுத்தை அறுத்தது
மனச்சாட்சி....

இடைவிடாமல்
சொன்னேன் நான் !
கவிஞன்......
தேசத்தை அடையாளப்படுத்தும்
முகவரி என்றேன்!
காலத்தை பிரதிபலிக்கும்
கண்ணாடி என்றேன்!
போதாமைக்கு
இன உறவுப்பாலம் அமைக்கும்
சமாதானத் தூதுவன் என்றேன்!

ஏளனமாகச் சிரித்துவிட்டு
சொன்னது
என் மனச்சாட்சி ......
எதிர்காலத்தை
எங்கோ தொலைத்துவிட்டு
பத்திரிகைக்குள்ளேயே
காலத்தை கடத்தும்
பைத்தியக்காரன் என்றது!

தினமும் நான் மனச்சாட்சியோடு
தோற்றுத்தான் போகிறேன்.


யாரிந்த கவிஞன் உங்கள் கருத்தோவியங்களையும் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

இந்த கவிதையும் வாழைச்சேனை சல்மானுள்ஹரீஸ் இன் "போதுக்காரநிகளுள் பெரியது " கவிதை தொகுதியில் இருந்து ரசிக்கப்பட்டது .

Monday, July 27, 2009

இது நியாயமா ???.......

கோடை
ஆண்டவன் போடும்
அவசர 'ஹர்த்தால்"
இயற்கை ஏற்படுத்திய
ஊரடங்குசட்டம்!

சூரியனே இங்கு
டயராக எரிக்கப்படுகின்றது!

வாயு தேவனுக்கு
வளிமண்டலம் வரமுடியாத
வழிமறிப்பு!

நாட்டில் "pulukka " கலவரம்
ஆக்கிரமிப்பதால்
மக்கள்
புழுங்கி தவிக்கும்
நிலவரம்....

வருண பகவானின்
ஆறு மாத கால
ஆட்சி கவில்ந்ததினால்
நாட்டிலேட்பட்ட
நிலையிது !!

ஆங்காங்கே
பஸ் வண்டிகளிலும்
கல்லூரி வாசல்களிலும்
கொதியுடன் கூடிய ரகளை !

இருந்தும் அக்னி தேவன்
தொடர்ந்தும்
ரோந்து நடவடிக்கைகளில்.


வாழைச்சேனை " சல்மான் ஹரீஸ்" இன்
"பொது காரணிகளில் பெரியது"
என்னும் கவிதை தொகுதியிலிருந்து ரசிக்கப்பட்டவை.

Sunday, July 26, 2009

என்ன லுக்கு ?????

பட பட பட்டாம்பூச்சி பட பட்க்குது.............
சொர்கமே என்றாலும்......!!! ஹா ஹா...

பறக்கும் (வண்டு) பறக்கும்...........