ad

Friday, July 30, 2010

இலங்கையில், ஊடகங்கள் மீது தொடரும் அட்டூழியங்கள் !!!!!

இன்று அதிகாலை கிடைத்த செய்தி ஊடகத்துறையினரையும் ஊடகங்களை நேசிக்கின்ற இதயங்களை ஒரு கணம்  உறைய வைத்திருக்கும்.



இலங்கையின் முன்னணி இலத்திரனியில் ஊடகங்களில் ஒன்றான வாய்ஸ் ஒப் ஏசியா குழுமத்தின்  வெற்றி எப்.எம். சியத எப்.எம்   ரியல் ரேடியோ ஆகிய அலைவரிசையின் செய்திப்பிரிவு இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத ஆயுததாரிகளினால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.









இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30மணியளவில் , கொம்பனித்தெருவில் அதியுயர் பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள  வாய்ஸ் ஒப் ஏசியா குழுமத்தின்  வெற்றி எப்.எம். சியத ரியல் ரேடியோ ஆகிய அலைவரிசையின் செய்திப்பிரிவுஅலைவரிசையின் செய்திப்பிரிவு மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கு முதலும் இலங்கை ஊடங்கள் மீது பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பாக கடந்த வருடம் ஜனவரி மாதம் ,இலங்கையின் மிகப் பெரிய தனியார் இலத்திரனியல் ஊடக நிறுவனமான மகாராஜா குழுமத்தின் எம்.ரி.வி./ எம்.பி.சி.யின் பிரதான கலையகம் அமைந்திருக்கும் கட்டிடத் தொகுதி மீது அதிகாலை ஆயுதக் கும்பல் கண்மூடித்தனமான தாக்குதலையும் நடத்தியிருந்தது.

இவ்வாறான தாக்குதல்கல் மூலம் இந்த தாக்குதலாளிகள் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் சொல்ல வருகின்ற விடயம் தான் என்ன??? எதனை எதிர்பார்த்து இவ்வாறான சின்ன தனமான வேலைகளை செய்து வருகின்றார்கள் என்று புரியவே இல்லை , உலகளாவிய ரீதியில் ஊடகவியலாளர்கள் ஏராளமான தாக்குதல் சம்பவங்களுக்கு உட்பட்டாலும் அவர்களது ஊடக பயணத்தில் இது வரைக்கும் எந்த விதமான தடங்கல்களும் வந்ததில்லை , மாறாக ஊடகவியலார்களின் துணிச்சலும் தன்னம்பிக்கையும் இன்னும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

எனவே கருத்து சுதந்திரத்துக்கு இருக்கின்ற உரிமைகளுக்கு வழிவிடுவதற்கு தடங்கல்கள் புரியும் அன்பான உள்ளங்களே உங்கள் நோக்கங்கள் நீண்ட காலத்துக்கு ஒருபோதும் உங்களுடன் துணைவர போவதில்லை.............
எனவே ஒருகணம் சிந்தித்து செயற்பட முயற்சி செய்யுங்கள், கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முயற்சி செய்யுங்கள்.

இச் சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் ஒரு தடவை தெரிவித்த கூற்று ஒன்றைநினைவுபடுத்துவது மிகவும் பொருத்தமானதாகும்.
"மனித குலம் அபிவிருத்தி இன்றி பாதுகாப்பை ஒருபோதும் அனுபவிக்கப் போவதில்லை. பாதுகாப்பு இன்றி மனித குலத்தினால் அபிவிருத்தியையும் அனுபவிக்க முடியாது. மனித உரிமைகளை மதிக்காவிட்டால் மனிதகுலம் அபிவிருத்தியையோ, பாதுகாப்பையோ அனுபவிக்கப் போவதில்லை'.