
ஆண்டவன் போடும்
அவசர 'ஹர்த்தால்"
இயற்கை ஏற்படுத்திய
ஊரடங்குசட்டம்!
சூரியனே இங்கு
டயராக எரிக்கப்படுகின்றது!
வாயு தேவனுக்கு
வளிமண்டலம் வரமுடியாத
வழிமறிப்பு!
நாட்டில் "pulukka " கலவரம்
ஆக்கிரமிப்பதால்
மக்கள்
புழுங்கி தவிக்கும்
நிலவரம்....
வருண பகவானின்
ஆறு மாத கால
ஆட்சி கவில்ந்ததினால்
நாட்டிலேட்பட்ட
நிலையிது !!
ஆங்காங்கே
பஸ் வண்டிகளிலும்
கல்லூரி வாசல்களிலும்
கொதியுடன் கூடிய ரகளை !
இருந்தும் அக்னி தேவன்
தொடர்ந்தும்
ரோந்து நடவடிக்கைகளில்.
வாழைச்சேனை " சல்மான் ஹரீஸ்" இன்
"பொது காரணிகளில் பெரியது"
என்னும் கவிதை தொகுதியிலிருந்து ரசிக்கப்பட்டவை.