கவிஞன் என்றால்
யாரென கேட்டு
என் மனச்சாட்சி
மல்லுக்கட்டியது!
நான் எழுத்துக்களை செதுக்கும்
சிற்பி என்றும்
உணர்வுகுக்கு
பிரம்மா என்றும் சொன்னேன் !
பேசும் மொழியை
காப்பாற்றும்
காலகிளியும் என்றேன்.
மனச்சாட்சி மறுத்து,,,,,,,
நேரம் தெரியாமல்
சிந்திக்கும்
சிந்தனைப் பித்தன் என்றும்
கண்டதை
எழுதிதள்ளும்
ஞானக் கிறுக்கன் என்றும்
அது சொன்னது!
நான் நிறுத்தி,
இருளிலுள்ள சமூகத்தை
வெளிச்சத்துக்கு கொண்டுவரும்
மின்சாரம் என்றேன்.
கடைசி வரைக்கும்
என் பெயரைக் காப்பாற்றும்
சம்சாரம் என்றேன்!
மீண்டும் மறுத்து ,
என் கழுத்தை அறுத்தது
மனச்சாட்சி....
இடைவிடாமல்
சொன்னேன் நான் !
கவிஞன்......
தேசத்தை அடையாளப்படுத்தும்
முகவரி என்றேன்!
காலத்தை பிரதிபலிக்கும்
கண்ணாடி என்றேன்!
போதாமைக்கு
இன உறவுப்பாலம் அமைக்கும்
சமாதானத் தூதுவன் என்றேன்!
ஏளனமாகச் சிரித்துவிட்டு
சொன்னது
என் மனச்சாட்சி ......
எதிர்காலத்தை
எங்கோ தொலைத்துவிட்டு
பத்திரிகைக்குள்ளேயே
காலத்தை கடத்தும்
பைத்தியக்காரன் என்றது!
தினமும் நான் மனச்சாட்சியோடு
தோற்றுத்தான் போகிறேன்.
யாரிந்த கவிஞன் உங்கள் கருத்தோவியங்களையும் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
இந்த கவிதையும் வாழைச்சேனை சல்மானுள்ஹரீஸ் இன் "போதுக்காரநிகளுள் பெரியது " கவிதை தொகுதியில் இருந்து ரசிக்கப்பட்டது .