ad

Tuesday, July 7, 2009

எனக்கு எப்போது பிறந்த தினம்?? சொல்லுங்க please


இரண்டு நாட்களுக்கு முன்பு எனது வயது 25.
அடுத்த வருடம் எனது 28 வது பிறந்தநாள் வருகிறது ,எனது பிறந்தநாள் ஒரு நாள் மட்டும்தான் வருகிறது ,எனில் நான் பிறந்த திகதி என்ன ?

(கண்டுபிடிச்சா சொல்லுங்க... விளக்கம் தந்தால் இன்னும் நல்லது )

Sunday, July 5, 2009

"சொறி"




கடித்த நுளம்பு ......
சொல்லிவிட்டு போனது
'சொறி'.

எங்கேயோ கேட்டது, இன்னும் மனசில நிக்குது.

Saturday, July 4, 2009

முத்திரை கேள்விகள்.


இன்று இரண்டாவது பதிவு......
இதில் இரண்டு கேள்விகள் .
பதிலளியுங்கள் பார்க்கலாம்.!!!

1 வது,

உலகில் எந்த நாட்டில் வெளிநாட்டவர்க்கும்,உள்நாட்டவர்க்கும் வெவ்வேறான முத்திரைகள் வெளியிடப்பட்டது???


2 வது.

தமிழ்.ஆங்கிலம்,சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் பொறிக்கப்பட்ட முதல் முத்திரை எது?


விடைகள் பின்னூட்டத்தில்.

"புத்திமான் பலவான் "

உலகத்தில் எவ்வளவோ வித்தியாசமான அதேவேளை சுவாரஸ்யமான நிகழ்வுகள் காலாகாலமாக நடந்துதான் வந்திருக்கிறது , அதுபோன்று சுவாரஸ்யமான விடயமொன்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

1956 melbourn olympic போட்டியில் பழுதூக்கும் போட்டியில் அமெரிக்காவின் penton வேய்க்ட் charles winsi என்பவர் பான்குபர்ர்ர்ரியிருக்கின்ற்றார்.
போட்டி தொடங்குவதற்கு ,15 நிமிடங்களுக்கு தனது உடல் எடையை பார்த்த இவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் காரணம் அவரது எடை 200 g கூடுதலாக இருந்திருக்கிறது.
இதனால் தனது உடல் எடையை குறைக்க நினைத்த நம்ம winsi க்கு அற்புதமான யோசனை தோன்றியிருக்கிறது , இதன் படி தனது தலை முடியை மொட்டையடித்து எடையை குறைத்துகொண்டாராம் .அதன் பின் போட்டியில் பங்குபற்றி 342.5kg எடையை தூக்கி உலக சாதனை படைத்திருந்தாராம்.

இப்ப சொல்லுங்க "புத்திமான் பலவான்" இல்லையா????/

Thursday, July 2, 2009

கண்ணில் பட்டதில் சுட்டது.....


கண்ணில் பட்டதில் ,மனசை தொட்டதை சுட்டுவிட்டேன் ...........
சுட்டது கவிஞர் பார்வதி விஜயின் "18 வயசுல..." கவிதை தொகுப்பிலிருந்து....
இப்ப புரிஞ்சிருக்குமே என்னத்த சுட்டோமின்னு.

கடிதத்தில் எச்சில் தொட்டு நீ
ஒட்டிய தபால் தலை
கடிதத்தில் ஒட்டாது
தேன் எப்படி பசையாகும்!

பாகற்காய் கொடியில்-நீ
காய போட்டிருந்த
பாவாடை தாவணியால்
பலகார பட்டியலில் -நான்
பாகட்காயையும் சேர்த்து கொண்டேன்.
தூக்கனான் குருவிகூட்டை
ஆச்சர்யமாய் பார்த்தாய்
உள்ளிருந்த குருவிகள்
உன்னை ஆச்சரியமாய் பார்த்தன ....
அதிசயங்கள் ஒன்றை யொன்று பார்த்து
அதிசயித்துக்கொள்வது
அதிசயமில்லைதானே !
கொலைகருவிகளின் பட்டியலில்
நீ கால்களில் அணிந்திருக்கும்
கொலுசையும் சேர்த்துக்கொள்ளலாம் .

ரொம்ப நேரம்
கண்ணாடி பார்த்துகொண்டிருப்பாய்
உன்னை அடிக்கடி பார்க்கும் உனக்கே
உன்னை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல்
உள்ளதென்றால்
எப்போதாவது பார்க்கும் எனக்கு
எப்படியிருக்கும்.

சின்ன வயசில் நிறைய
சிலேட்டு குச்சிகளை முழுங்குவேனாம்!
இருபது வயதுகளில்
இப்படியெல்லாம் உன்னைப்பற்றி
எழுதத்தானோ ?

உங்களுக்கும் புடிச்சிருக்கா ?????????

Tuesday, June 30, 2009

அடி ஆத்தி அப்படியா சங்கதி....!!!!!


**ஒவ்வொரு மணி நேரத்திற்கும் உலகம் முழுவதும் உள்ள வங்கிகளில் 22 ஆயிரம் காசோலைகள் தவறான வங்கி கணக்குகளில் "வரவு " வைக்கப் படுகிறதாமுன்கோ.......

**புகழ் பெற்ற நயாகரா நீர் வீழ்ச்சியில் ஒரு விநாடி நேரத்தில் விழுகின்ற தண்ணீரை பயன்படுத்தி 4000 குளியல் தொட்டிகளை நிரப்ப முடியுமாம்.

**இங்கிலாந்தில் ஒரு குடும்பம் Tv பார்பதற்காக சராசரியாக ஒரு நாளைக்கு 6 மணிநேரத்தை செலவு செய்கிறார்களாம் .

**அமெரிக்காவில் குற்ற செயல்களுக்காக கைதாபவர்களில் அதிகமான எண்ணிக்கையில் இருப்பவர்கள் "குடித்து விட்டு மது போதையில் வண்டி ஓட்டுபவர்களாம்.

**ஒரு அமெரிக்கர் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 18 பவுண்ட் எடையுள்ள ஆப்பிள் பழங்களை சாப்பிடுறாங்களாம் .

என்னங்க ஆச்சர்யமாக இருக்கா!! இதுபோல இன்னும் நிறைய இருக்கு ,ஒவ்வொரு நாளும் வந்து இதே போல பிட்டு பிட்டா போடுவேனாம்.....

Sunday, June 28, 2009

நீங்க அங்கே போனால் எவ்வளவு??


பூமியில் எங்களுக்கெல்லாம் ஒரு நிறை உண்டு ,அதே போல நீங்கள் பூமியை விட்டு வேறு கோள்களுக்கு சென்றால் எங்களது நிறை எப்படியிருக்கும் !!! அறிந்து கொள்ளலாமா ? பூமியில் 60 kg கொண்ட ஒரு மனிதனின் நிறை வேறு வேறு கோள்களில் எவ்வளவு இருக்கு என்று பாருங்கள் ,பின்னர் உங்களது எடையை கணித்துகொள்ளுங்கள்...


செவ்வாய்கிரகத்தில் ---- 22.8 kg
புதன்---------- 21.6 kg
வியாழன்------------------159.0 kg
சனி ----------- 68.4 kg
யுரேனஸ் ------- 57.6 kg
நெப்டியுன்------ 60 Kg

Saturday, June 27, 2009

சிந்திப்போமா....????? (மீள் பதிவு )

அண்மையில் நடந்த வலைப்பதிவுகளின் தொலைவிற்கு பின்னர் நம்ம பதிவுகள் சிலவற்றை மீள் பதிவிடலாமென எண்ணி உள்ளேன் அதற்காக அடியேனின் பழைய பதிவுகளை சேமித்து தந்த நம்ம வால்பையனுக்கும் நன்றிகள் பலகோடி......
இனி மீள் பதிவு -1

வேறென்ன நம்ம கவிதைகளின் பிதாமகன்கள் உருவாகிய கவிதைகள் சிலவற்றை இன்றும் கண்டெடுத்திருக்கிறேன் அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று .........
வழமைபோல கவிதை முத்துக்களை பிரசவித்த "சிப்(ற்)பி "களுக்கு நன்றிகளை சொல்லிக்கொண்டு நமது தேடல்களை ரசிக்கலாம் வாங்க ...
=================================================================
"உழைப்பு உழைப்பு ....
ஓயாத உழைப்பு .....
உழைப்பினால்
மட்டுமேஒவ்வொரு
வந்தவன் நான் "
நட்சத்திர
விடுதியின்நான்காம்
தொழிலதிபர் .
உட்காந்திருந்த"லிப்ட்" கள்ஓசை
எழாமல்சிரித்துக்கொண்டன .
============================
வசதி
படைத்தவர்களின்வீடுகளில்
உள்ளநீச்சல் குளங்களைப்பார்க்கும்
போதெல்லாம்வரும் எனக்கு சந்தேகம் ....
"இந்தகுளங்களை எங்கு போய்குளிப்பாட்டுவது ??."
==========================
பிறவிக்கடன்
இறைவன்
தான் என்னை கேட்பான்"எப்படி வாழ்ந்தாய்? என்று !
இறைவனிடம் நானும் கேட்பேன்"
எப்போது வாழ்ந்தேன் ?" என்று '

Monday, June 22, 2009

வாழ்க்கை சமன்பாடு


A=X+Y+Z

X=வேலை
Y=விளையாட்டு
Z=வாயை மூடிகொள்

A=வெற்றி

-ஐன்ஸ்டீன் சொன்னது -

Tuesday, June 16, 2009

புது விதி ...



ரசித்த கவிதைகள் சில மீண்டும் பதிவுக்காக .....
மேத்தவாணனின் "கல்லறைக்கு வாயிருந்தால்"....கவிதை தொகுதியிலிருந்து ,

" தாலிக்குத் தங்கம்
இல்லாததால்....
அவளின்
தலை முடி
வெள்ளியானது!"



மனுஷ்ய புத்திரன் கவிதையொன்று....

"உன்னைக்

காணும் போதெல்லாம்

தாவரவியல் பேராசிரியர்களைத்

தண்டிக்க பிரியப்படிகிறேன்

ஏன் தெரியுமா?

இங்கே ஒரு

நந்தவனமே

நடக்கும் செய்தி தெரியாமல்

தாவரங்கள்

இடம் பெயர்வதில்லைஎன்று

எய்க்க முயல்கிறார்கள்".